சர்வதேச போட்டியில் தங்கம்…நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவனின் மகன்: பிரபலங்களின் வாழ்த்து மழையில் வேதாந்த்..!!

Author: Rajesh
18 April 2022, 5:02 pm

டென்மார்க்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதான்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

டென்மார்க் நாட்டில் டேனிஷ் ஓபன் 2022 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 800m பிரீ ஸ்டைல் ஸ்விம்மிங் பிரிவில் கலந்துகொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் இந்த போட்டியை 8:17.28 நேரத்தில் முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவருக்கு நீச்சல் போட்டியில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம். சென்ற வாரம் 1500m பிரீ ஸ்டைல் ஸ்விம்மிங் பிரிவில் கலந்து கொண்ட இவர் 15:57:86 நேரத்தில் முடித்து வெள்ளி பதக்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் சமூக வலைதள பக்கத்தில் மாதவன் “GOLD” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சாதனை மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாகவும், தன் மகனின் பயிற்சியாளருக்கு தன் நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சாதனையை நிகழ்த்திய மாதவன் மகன் வேதாந்த்துக்கு இந்திய முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1317

    1

    0