அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!
Author: Selvan5 February 2025, 8:10 pm
வைரலாகும் நடிகை வேதிகாவின் திருமண வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை வேதிகா.இவருக்கு 37 வயது ஆனாலும் திருமணம் செய்யாமல் சிங்கிள் ஆக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒருவரை திருமணம் செய்வது போல வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.மேலும் இது உண்மையா?பொய்யா? என்று கண்டுபிடியுங்கள் என கேட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் நடிகை வேதிகாவின் திருமணம் குறித்த தகவலை கூகிளில் தேடி வருகின்றனர்.மும்பையில் பிறந்த நடிகை வேதிகா தமிழில் மதராசி திரைப்படம் அறிமுகம் ஆனார்.
பின்பு லாரன்ஸ் கூட நடித்த முனி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் ஆகி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.பல கமர்சியல் ஹிட் கொடுத்த இவர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பரதேசி திரைப்படத்தில் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று காட்டினார்.
இதையும் படியுங்க: சீரியலில் அம்மணி…சினிமாவில் திறந்தமேனி…’FIRE’ படத்தின் பாடலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!
இந்த நிலையில் எப்போதும்,சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வேதிகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.அந்த வகையில் அவர் தற்போது ஒரு நபரை கோவிலில் வைத்து திருமணம் செய்வது போல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதற்கு பலரும் இது உண்மை இல்லை,இது ஒரு படத்தில் வர கூடிய காட்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.