மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…

Author: Prasad
3 April 2025, 4:05 pm

கலவையான விமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films

அருண் குமாரின் மேக்கிங் யதார்த்தமாக இருக்கிறது, ஆனால் படத்தின் திரைக்கதையில் சற்று சொதப்பல் இருப்பதாக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

என் படத்துல அந்த விஷயமே கிடையாது…

இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் இயக்குனரான எஸ்.யு.அருண் குமார் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “வீர தீர சூரன் ஒரு மதுரை சார்ந்த கதை. பொதுவாக மதுரை சார்ந்த கதையில் கெட்ட வார்த்தைகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தவே இல்லை. ஒரே ஒரு வார்த்தை மட்டும் வரும். ஆனால் அது கெட்ட வார்த்தை என்று சொல்லமுடியுமா என தெரியவில்லை. எதனால் இப்படி முடிவெடுத்தீர்கள்?” என கேட்டார். 

veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films

அதற்கு அருண் குமார், “என்னுடைய எந்த படத்திலும் தண்ணி அடிப்பது போலவோ தம் அடிப்பது போலவோ காட்சிகளை நான் வைத்தது இல்லை. அது அவசியப்படவில்லை என நான் நினைக்கிறேன். இந்த படத்திலே கூட மயிர் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோம். அது அந்த கதாபாத்திரத்தின் வலியை காட்டுவது போல்தான் அமைந்திருக்கும். இத்தனைக்கும் அது தமிழ் சொல்தான். ஆனால் அது வழக்கத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்துதான் சென்சார் கொடுக்கப்படுகிறது. அது மட்டுமே பிரதானமாக கதைக்குள் இருக்கக்கூடாது. 

இந்த படத்தை நான் கதைக்குள் உள்ளடக்கிய படமாக எடுக்கத்தான் முயற்சி செய்தேன். இதுதான் காரணம். கெட்ட வார்த்தை வைத்துதான் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை” என பதிலளித்துள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Leave a Reply