ஆள விடுங்கடா சாமி…பொங்கல் ரேஸில் இருந்து ஓட்டம் பிடித்த வீர தீர சூரன்..!
Author: Selvan2 January 2025, 12:56 pm
சைலெண்டா விலகிய வீர தீர சூரன்
பொங்கல்,தீபாவளி என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வருவதை ரசிகர்கள் விரும்புவார்கள்.
அந்தவகையில் வரும் பொங்கல் பண்டிகை அன்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில்,திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டுள்ளது.இதனால் கடும் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.
ஏற்கனவே பொங்கல் அன்று விடாமுயற்சி,ஷங்கரின் கேம் சேஞ்சர் பாலாவின் வணங்கான்,விக்ரமின் வீர தீர சூரன் ஆகிய படங்கள் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில்,தற்போது விக்ரமின் வீர தீர சூரனும் பொங்கல் அன்று திரைக்கு வராது என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்க: முரட்டுத்தனமா இருக்கே.. எல்லை மீறிய ரவீனா தாஹா : இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
இதனால் இப்படம் குடியரசு தினத்தில் வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.இது ஒரு புறம் இருக்க விடாமுயற்சி விலகியதால் பல சிறிய படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளது.
ஜெயம் ரவியின் காதலிக்கநேரமில்லை, படைத்தலைவன், மெட்ராஸ்காரன், 10 ஹவார்ஸ், நேசிப்பாயா,தருணம் என பல படங்கள் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.இதனால் வீர தீர சூரன் சைலண்டாக பொங்கலில் இருந்து விலகியுள்ளது.