இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

Author: Selvan
29 March 2025, 6:08 pm

விக்ரம் முரட்டு கம்பேக்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ திரைப்படத்திற்குப் பிறகு,விக்ரம் நடித்த எந்த ஒரு படமும் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை.

அவரது இருமுகன்,கோப்ரா,தங்கலான் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.குறிப்பாக, தங்கலான் திரைப்படம் விக்ரத்தின் நடிப்புக்காக பெரும் பாராட்டுகளை பெற்றாலும்,கதைக்களம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால் திரைப்படம் பொருளாதார ரீதியாக பெரும் வெற்றியை பெற முடியவில்லை.

இந்நிலையில்,இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்தார். இப்படத்தின் முதல் பாகத்தை வெளியீடு செய்யும்முன்பே,இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது. பல சிக்கல்களை தாண்டி,மார்ச் 27ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு இரண்டாவது பாகம் வெளியானது.

வெளியான முதல் நாளிலிருந்தே வீர தீர சூரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழகத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

முதல் நாளில் மாலை 6:00 மணி மற்றும் இரவு 10:00 மணிக்கு மட்டுமே காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.இரண்டாவது நாளில் மொத்தம் 4 காட்சிகள் வரை அதிகரிக்கப்பட்டதால்,படம் வசூலில் முந்தைய தினத்தை விட மூன்று மடங்கு அதிகம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக,வீர தீர சூரன் இரண்டாவது நாளில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால்,வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் வீர தீர சூரன் விக்ரமிற்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?
  • Leave a Reply