திரையும் ‘தீ’ பிடிக்கும்.. பொங்கலை முன்னிட்டு ரீலிசான பிரபல நடிகரின் படத்தின் போது தீப்பற்றிய திரை : பதறி ஓடிய ரசிகர்கள்…!
Author: Vignesh12 January 2023, 7:00 pm
டோலிவுட்டில் சங்கராந்தி ஸ்பெஷலாக சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுடன் துணிவு, வாரிசு படங்களும் தெலுங்கில் டப் ஆகி வெளியானது.
தமிழ்நாட்டில் பொங்கல் ரிலீஸ் ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக துணிவு படமும் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசானது.
தமிழ்நாட்டின் இரு பெரும் நடிகர்களான அஜித் – விஜய் படங்கள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்கு மோதி உள்ளது. இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோலிவுட் பொங்கல் வெளியீட்டுக்கு இணையாக டோலிவுட் சினிமாவிலும் சங்கராந்தி ரிலீசாக, டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் படமும், தெலுங்கு சினிமா உச்ச நட்சத்திரமும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா படமும் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு நேரடியாக மோதி உள்ளது.
அதன்படி டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும் (இன்று) ரிலீசானதால், டோலிவுட் வட்டாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ‘வீர சிம்மா ரெட்டி’ திரையிடப்பட்டிருந்த திரையரங்க திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
#VeeraSimhaReddy
— Venkatramanan (@VenkatRamanan_) January 12, 2023
Screen unmailaye on fire ??pic.twitter.com/YJPEgviYFr
அதே நேரம் விஜய்யின் வாரிசு படம் தமிழ் – தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீசாகி சங்கராந்தி ஸ்பெஷல் படங்களுடன் போட்டி போட உள்ளது. அதேபோல் ‘துணிவு’ படமும் தெலுங்கிலும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கோலிவுட்டில் விஜய் தான் நம்பர் 1 என தில் ராஜூ சொன்ன கையோடு தெலுங்கிலும் பிரம்மாண்டமான முறையில் வாரிசு படத்தை வாரசுடு என ரிலீஸ் செய்கிறார். அதே போல் துணிவு படம் தெகிம்பு என்ற பெயரில் டோலிவுட்டில் வெளியாக உள்ளது.