மரண குத்து ஆட்டம் போட்ட ராம்சரண், சல்மான் கான்- குபுகுபுவென வைரலாகும் வீடியோ!
Author: Shree4 April 2023, 4:39 pm
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். சிறுத்தை சிவா இயக்கியிருந்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.
இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் ‘ஒடியா’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியில் ‘கிஸி கி பாய் கிஸி கி ஜான்”என்ற பெயரில் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலில் சல்மான் கான், ராம் சரண், வெங்கடேஷ் டகுபதி மூவரும் சேர்ந்து மரணகுத்து ஆட்டம் போட்டு மெர்சலாக்கியுள்ளனர். சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.