ஆள விடுங்கடா சாமி…அஜித் படத்தால் நடிப்பதையே வெறுத்துட்டேன்…’வீரம்’ பட நாயகி பரபர பேட்டி.!

Author: Selvan
5 February 2025, 6:25 pm

வீரம் படத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகை மனோசித்ரா

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு 4 தம்பிகள் இருப்பார்கள்,அவர்களில் பாலாவின் காதலியாக நடித்தவர் தான் நடிகை மனோசித்ரா.

படம் வெளியாகி பல வருடங்கள் ஆன பின்பும் வீரம் படத்தில் நடந்த பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் வீரம் ஷூட்டிங் பல இடங்களில் நடைபெற்றது, அப்போது எனக்கு எப்படியாவது நடித்து பெரிய ஆளா வர வேண்டும் என வெறியில் இருந்தேன்,ஆனால் ஷூட்டிங் நடக்கின்ற இடத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது,ஒரு பக்கம் அஜித் பொங்கல் செய்து எல்லோருக்கும் கொடுத்து கிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்க: கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!

நான் சினிமா பசியில் இருந்தேன்,அப்போது என்னுடைய கதாபாத்திரம் என்ன நிலையில் உள்ளது என்று யோசித்தேன்,ஆரம்பத்தில் என்னை படத்தில் நடிக்க கூப்பிட்ட போது தமன்னா பாதியில் இறந்துவிடுவார்,அதன் பிறகு நீங்கள் தான் அஜித்துக்கு ஜோடி என்று கூறினார்கள்.ஆனால் அது பொய் என்று ஷூட்டிங் நடக்கின்ற இடத்திற்கு வந்த பிறகே தெரிந்தது.இதனால் நான் நடிப்பதை வெறுத்து இயக்குனரிடம் நான் கிளம்புகிறேன் என அழுதேன்,உடனே எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள்,ஆனால் ஒரு இரண்டு நாளில் நான் அங்கிருந்து கிளம்பி தெலுங்கில் நடிக்க சென்றுவிட்டேன்.

அதன் பிறகு படக்குழு பல நாட்கள் கழித்து ஒரு இரண்டு நாட்கள் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு போங்க என்று கூறினார்கள்,அஜித் சாருக்காக நான் நடித்து கொடுத்து சென்றேன்,வீரம் படத்தால் தமிழ் சினிமாவில் என்னுடைய கரியர் மிகவும் பாதிப்படைந்தது ,எனக்கு இன்னும் வீரம் படக்குழு மீது வருத்தம் உள்ளது என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

  • GV Prakash latest interview நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!