இதை எப்படி சொல்றதுன்னு தெரியல… Cooku with Comali-யை விட்டு விலகிய வெங்கடேஷ் பட் வெளியிட்ட Video..!

Author: Vignesh
30 April 2024, 5:19 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் செஃப் வெங்கடேஷ் பட். சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்வில் தோல்வியடைந்தார்.

மேலும் படிக்க: Adjustment பண்ண வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!

அதன் பின்னர் தனக்கு பிடித்த செஃப் தொழிலை கையில் எடுத்தார். தாஜ் ஹோட்டல், தி லீலா பேலஸ் உள்ளிட்ட பெரிய ஹோட்டல்களில் பணியாற்றி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று புகழ் பெற்ற வெங்கடேஷ் பட் தற்போது ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என கூறி அதிர்ச்சியளித்து இருந்தார்.

மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)

வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் தாமுடன் நடுவராக இணைந்துள்ளார். இப்படி ஒரு நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வெங்கடேஷ் பட் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் என்னை மிஸ் செய்வது நீங்கள் அனைவரும் எனக்காக அனுப்பிய மெசேஜ் எல்லாம் பார்க்கும் பொழுது நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மிகவும் நன்றி உங்களை என்றும் ஏமாற்ற மாட்டேன் என்றும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

என்னுடைய வாழ்வின் துடிப்பே நீங்கள் தான் உங்களுக்காக காலை 8 மணி சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. எட்டு மணி முதல் சன் டிவி பாருங்கள், உங்களுக்கு அது தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பேசிய வெங்கடேஸ் பட் எனக்கு இதைவிட மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!