AK 63 மூன்று வேடங்களில் களமிறங்கும் அஜித்?.. வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு..!

Author: Vignesh
14 March 2024, 8:05 pm

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62 ஆவது படமான விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ajith

இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். படத்திற்கு தேவி பிரசாத் இசையமைக்க கமிட்டாகி உள்ளார். இதனிடையே, “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருப்பதால், இந்த படத்தில் மூன்று வேடங்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அஜித்தின் வரலாறு படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோட் பட இயக்குனர் ஆன வெங்கட் பிரபு இந்த படத்தின் அப்டேட் வெளியான நிலையில், வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விஜய் படத்துக்கு அப்டேட் குடுக்க சொன்னா அஜித் படத்துக்கு வாழ்த்து சொல்லிட்டு இருக்கியா என்று விமர்சித்து வருகின்றனர்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…