டோலிவுட் பக்கம் திரும்பிய வெங்கட்பிரபு…மாஸ் ஹீரோ கூட அடுத்த படம்: தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!!

Author: Rajesh
6 April 2022, 5:59 pm

வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு மற்றும் மன்மதலீலை ஆகிய இரண்டு படங்களும் 4 மாத இடைவெளியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி தற்காலிகமாக ‘என்.சி 22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். விரைவில் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Naga Chaitanya has signed a film with Venkat Prabhu. This is his first film after his split with Samantha Ruth Prabhu.

இந்த படத்தை பிரபல இந்த படத்தை ஸ்ரீ நிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணையும் இருமொழி படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

Image

நாகசைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, Thank you என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 11 வது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ