சினிமா / TV

விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!

“சென்னை 28” மூன்றாம் பாகம் வருகிறதா?

கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும்,நடிகராக பெரிய அளவில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதையும் படியுங்க: ரிலீஸ் ஆனது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்..ரிப்பீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்.!

இதனால்,இயக்குனராக தனது திரைப்பயணத்தை மாற்றினார்.2007 ஆம் ஆண்டு,சென்னை 28 என்ற திரைப்படத்தை இயக்கி பெரிய வெற்றியை பெற்றார்.ஜெய்,மிர்ச்சி சிவா,நிதின் சத்யா,விஜய் வசந்த்,பிரேம்ஜி, சம்பத்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம்,சென்னை நகரத்தில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பற்றிய ஒரு கலகலப்பான கதையை கொண்டிருந்தது.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம், வெங்கட்பிரபுவுக்கு இயக்குனராக பெரிய அளவில் அறிமுகம் பெற்றுத்தந்தது.

சென்னை 28 படத்தின் வெற்றிக்கு பிறகு,சரோஜா,கோவா,மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை வெங்கட்பிரபு இயக்கினார்.

அதிலும் இவர் இயக்கிய “The Greatest of All Time (The GOAT),இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரூ. 445 கோடி வசூலித்தது.இதனால், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெங்கட்பிரபு இன்னும் ஒரு முறை சாதனை படைத்தார்.

“The GOAT” படத்திற்குப் பிறகு,வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் இயக்கவுள்ளதாக இருந்தார்.ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது.அஜித் படத்திற்கும் வாய்ப்பு வரவில்லை.இதனால், தற்போது “சென்னை 28 – 3ம் பாகம்” இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்ட நடிகர்கள் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

50 minutes ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

3 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

4 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

5 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

6 hours ago

அதிமுக பேரையே நான் சொல்லல.. கூட்டணி குறித்து அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

7 hours ago

This website uses cookies.