பவதாரிணி உடன் கடைசி போட்டோ.. வெங்கட் பிரபு போட்ட எமோஷ்னல் பதிவு – ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!
Author: Vignesh30 January 2024, 3:30 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பவதாரணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெங்கட் பிரபு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், பவதாரணி அனைவரையும் கடைசியாக சந்தித்தபோது எடுத்த புகைப்படம் என தெரிகிறது. வெங்கட் பிரபு பதிவிற்கு கீழ் அனைவரும் பார்க்க அழுகையாக வருகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.