உனக்கு ஆபாசமாக பேசி வீடியோ போட தான் தெரியும்.. ஜிபி முத்துவை அசிங்கப்படுத்திய பிரபலம்..!

Author: Vignesh
22 May 2023, 7:45 pm

டிக் டாக் மூலம் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

மேலும் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டிய வீடியோக்கள் பூடியூப்களில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோக்களை பதிவிட்ட அவர் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார். இதையடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்.

மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமானா ஜி.பி.முத்துவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

இதையடுத்து அதிர்ஷ்டமும் அவர் வீட்டுக்கே தேடிப் போனது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜி பி முத்து.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே ஆதாம் னா யாரு என கமல்ஹாசனையே மலைக்க வைத்தார் ஜிபி முத்து. சிறிது நாட்களில் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அது மட்டுமல்ல.. சன்னி லியோனோடு ஜிபி முத்து நடித்த ஓ மை கோஸ்ட் பட நிகழ்ச்சியில் பங்கேற்று.. ரசிகர்களின் ஆதரவுகளை சம்பாதித்தார். தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு நீண்டு கொண்டே போகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஜிபி முத்து எல்லாம் நடிகர் கிடையாது என்றும், அவர் எல்லா வீடியோவில் ஒரே மாதிரி தான் இருக்கிறார். ஆபாசமாக பேசுகிறார் என்பது எனக்கு தெரியாது எனவும், நிறைய காசுக்காவும் லைக்ஸ்காகவும் தான் அப்படி பேசுறாங்க, நடிப்பு என்கிறது அவருக்கெல்லான் இரண்டாம் பச்சம் தான் என்று மேடையில் ஜிபி முத்துவை பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் வெங்கட் பிரபு அசிங்கப்படுத்தியிருக்கிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!