வச்சி செய்ய போறாரு… தளபதி 68 இயக்குனர் இவரா ? அப்போ படம் பக்கா மாஸ் தான்!

Author: Shree
15 May 2023, 4:32 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதில் பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

செட்டில் கூட மிகவும் அமைதியாக ஒன்றுமே தெரியாதவர் போல் இருப்பார். ஷாட் ரெடி என்றதும் வேறு விஜய்யை பார்க்க முடியும் என அவருடன் நடித்த நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அல்லது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி தோல்வியடைந்ததால் இனி தெலுங்கு இயக்குனர்களே வேண்டாம் என ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு விஜய் இயக்குனரை மாற்றிவிட்டாராம். அதனால் நம்மு ஊரு இயக்குனர் தான் செட் ஆகும் என எண்ணி தற்போது தளபதி 68 படத்தின் இயக்குனராக வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியிருக்கிறார். வெங்கட் பிரபு படம் என்றாலே, காமெடி, Fan moments, மாஸ் சீன்ஸ், பாடல்கள் என அனைத்தும் கலந்த மசாலா திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது வெங்கட் பிரபு படம் என்பதால் இசையமைப்பாளர் நிச்சயம் யுவன் ஷங்கர் ராஜா தான் இருப்பார் என யூகிக்க முடிகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்