ஆஸ்கர் விருது வென்ற பயில்வான் ரங்கநாதன்… வெங்கட் பிரபு பெருமிதம்!

Author: Shree
24 April 2023, 10:22 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், பயில்வான் இரண்டு ஆஸ்கார் விருதுகளுடன் நிற்பது போல அந்த போட்டோ வெளியிட்டு, “இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் “இசை வெல்லம்” பயில்வான் ரங்கநாதன் சாருக்கு – அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம், உங்கள் தொழிலின் பெரிய ரசிகன் சார். மேலும், விவரங்களுக்கு ஜிவிபிரகாஷ் ட்விட்டர் பக்கத்தை நாளை 5 மணிக்கு பார்க்கவும் என பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு வேலை இவர்கள் ஏதேனும் பாடல் புதிதாக உருவாக்கியிருக்கலாம் என கோலிவுட் சினிமாவில் பேசப்படுகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!