மலையாள திரைப்படத்தில் மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விநாயகன். இவர் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் கயல் படத்தின் ஹீரோவுக்கு நண்பராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தேடி கொடுத்தது.
அதையது தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிரட்டலான அவரின் நடிப்பை பார்த்து கோலிவுட்டில் பல முன்னனி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக விநாயகன் குறித்த சர்ச்சையான விஷயம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீடூ சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்குள்ளான நடிகர் விநாயகன், கடந்த ஆண்டு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அப்போது மீடூ சர்ச்சையில் பேசப்பட்டது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைக்கவில்லை. ஒரு நடிகையை எனக்கு பிடித்துவிட்டால் வெளிப்படையாக கூப்பிடுவேன் என கூறி அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், ஏறக்குறைய 10 வருட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் விநாயகன். நெல்சன் திலீப்குமார் தான் அதிக சம்பளம் கொடுத்து நடிக்க அழைத்து வந்ததாகவும், கூறினார். அவரது வர்மா கதாபாத்திரம் படத்தில் பலரையும் கவர்ந்தது.
தற்போது, பிரபல நடிகர் விநாயகத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் குடிபோதையில், தகராறு செய்த விநாயகாவை போலீசார் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது விஷயம் என்னவென்றால், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விநாயகன் காவல் நிலையத்தில் போனில் பேசியுள்ளார். இதையடுத்து பெண் போலீஸார் மஃப்டியில் விநாயகனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மஃப்டியில் சென்ற பெண் போலிஸாரிடம் விநாயகன் பிரச்னை செய்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அதுசம்பந்தமாக நேற்று மாலை எர்ணாகுளம் நார்த் போலீஸ் ஸ்டேஷனுக்கு மதுபோதையில் விநாயகன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, போலீஸ் ஸ்டேஷன் முன் நின்று சிகரெட் புகைத்துள்ளார் விநாயகன். அதற்கு போலீஸார் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, நார்த் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்ற விநாயகன், “என் வீட்டுக்கு வந்த பெண் போலீஸ் யார் என்று தெரியவேண்டும்” எனக்கூறி தகராறு செய்து இருக்கிறார். விநாயகனை போலீஸார் தடுத்து சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனால், அவர் மதுபோதையில் இருந்ததால் போலீஸாரை அநாகரிகமாக பேசி தகராறு செய்தததையடுத்து, போலீஸார் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.