“பேரதிர்ச்சி” 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள மூத்த நடிகர் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி..!
Author: Vignesh23 December 2022, 10:08 am
நீண்ட நாட்களாக வயோதிக நோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா காலமானார். உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா, சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில், இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.

பிரிட்டிஷ் இந்தியாவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இவர் கடந்த 1935ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, கவுதாரத்தில் பிறந்தார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா வில்லன், குணச்சித்திர வேடங்களிலும், பல புராண மற்றும் நாட்டுப்புற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவர் இதுவரை 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.