சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகிய முத்து?- அவரே வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
12 February 2024, 4:33 pm

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

siragadikka aasai

கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் மீனா திருமணத்தோடு 300 எபிசோடுகளை சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பானதை தொடர்ந்து, வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாவில் லைவில் வந்தார்.

siragadikka aasai

அப்போது, ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டு வந்தனர். அதில், ஒருவர் நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், சிறகடிக்க ஆசை தொடரில் நடிப்பீர்களா இல்லை விளங்குவீர்களா என கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு, பதில் அளித்த முத்து நான் இப்போது, பேசுவதை நீங்க ரெக்கார்ட் பண்ணி கூட வச்சுக்கலாம். ஏன்னா, இந்த சீரியலில் இருந்து எப்போதும் விலக மாட்டேன்.

siragadikka aasai

இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடம் ஒளிபரப்பானாலும், சரி அதில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன். இந்த சீரியல்தான் எனக்கு ஒரு மறுவாழ்வு வந்தது. வெப் சீரிஸ் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், அவையெல்லாம் தாண்டி சிறகடிக்க ஆசை சீரியல்தான் எனது மெயின் வேலை என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 489

    0

    0