இதுக்குப் பிறகு இப்படியொரு படம் பண்ண முடியுமானு தெரில.. வெற்றிமாறன் அப்செட்!
Author: Hariharasudhan18 February 2025, 8:59 am
இதற்குப் பிறகு விடுதலை 3 போன்ற படம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
சென்னை: விடுதலை 2 படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு Caib Award விருது வழங்கப்பட்டது. சென்னையில் இந்த விருது விழாவின் மேடையில் பேசிய வெற்றிமாறன், “எங்களுடைய குழுவினர் எல்லோருக்குமே விடுதலை ரொம்ப ஸ்பெஷலான படம். அதில் உழைப்பு, படிப்பு என நிறைய கற்றுக்கொண்டோம்.
ஒரு படத்தைத் தொடங்கும்போது நமக்கு ஒன்றை தெரிந்து கொள்வதும், அந்தப் படத்தை முடிக்கும்போது வேறு ஒன்றை புதிதாகக் கற்றுக்கொள்வதும் எப்போதாவது நடக்கும். அது இந்தப் படத்தில் நடந்தது. ஒரு இடத்தில் நான் இருக்கிறதாக எனக்கு உணர்த்தியது ‘விடுதலை’.
தனிப்பட்ட வகையிலும், நான் இந்தப் படத்தில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். உடல், மன உழைப்பு, அரசியல், தத்துவம், கருத்தியல் என நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். இதற்குப் பிறகு, இப்படியொரு படம் பண்ண முடியுமா, அது அமையுமானு தெரியல” என்றார்.

மேலும், வருடந்தோறும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிறந்த படம், சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு CHENNAI INSTITUTE OF EDUCATIONAL TECHNOLOGY & RESEARCH தரப்பில் CINEMA AT ITS BEST (CAIB) விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!
விடுதலை 2: தற்போது இதன் தொடர்ச்சியாக, 7ஆம் ஆண்டாக 2024ஆம் ஆண்டிற்கான CAIB விருதுகள் விழாதான் நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் விடுதலை.
இளையராஜா இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, விடுதலை 2ஆம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில், மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.