விஜய்யை டம்மியாக்கிய வெற்றி மாறன்… விடுதலை 2 ட்ரெய்லரில் அந்த வசனத்தை கவனிச்சீங்களா?!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2024, 10:43 am

கடந்த 2023ஆம் வருடம் வெளியான சூப்பர் ஹிட் படங்களல் விடுதலை படத்திற்கு தனித்துவம் உண்டு. இதன் தொடர்ச்சியாக விடுதலை பார்ட் 2 வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நேற்று டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லரில் இடம்பெற்ற சில வசனங்கள் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்கின்றனவா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க: டேய் நான்தான் சொன்னேன்ல.. கடுப்பான வெற்றிமாறன்.. என்ன நடந்தது?

“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் உருவாக்குவார்கள்; அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது” என்ற வசனம் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் விதமாக உள்ளது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், “என்ன மாதிரி ஒருத்தன் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததால் தான் உன்னை மாதிரி ஒருத்தன் இங்க உட்கார்ந்திருக்க” என்ற வசனம் திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து கூறியதாகவும் கூறப்படுகிறது.

Vetrimaaran Attack TVK Leader Vijay In Viduthalai Part 2 Trailer

விஜயின் அரசியல் கொள்கை தொடர்பில் பல கேள்விகள் இருந்துகொண்டிருக்கும் நிலையில், விடுதலை 2 படத்தின் இந்த வசனங்கள் அவரது கட்சியை நேரடியாக விமர்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை அடுத்து விஜயின் ரசிகர்களும் அவரது கட்சி தொண்டர்களும் இணையத்தில் இதற்கு எதிராக கருத்துகள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 152

    0

    0