இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அது தவறு…வெற்றிமாறனுக்கு வந்த திடீர் வக்கீல் நோட்டிஸ்…அதிர்ச்சியில் படக்குழு.!

Author: Selvan
2 February 2025, 6:46 pm

பேட் கேர்ள் படத்தால் வெற்றிமாறனுக்கு சிக்கல்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி பல வித சிக்கல்களை சந்தித்து வருகிறது.அந்த வகையில் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் சமிபத்தில் வெளியானது.

Bad Girl Tamil movie teaser issue

இதில் நடித்திருக்கும் பள்ளி மாணவியை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படம்,ஒரு பள்ளி மாணவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது,அந்த மாணவி வீட்டின் சொல் பேச்சை மீறி அவளுடைய விருப்பம்படி சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறாள்,மேலும் ஆண் நண்பருடன் பழக்கம்,குடிப்பது,புகைபிடிப்பது போன்ற பல்வேறு கெட்ட செயல்களை செய்வது போல அந்த டீசரில் காட்டி இருப்பார்கள்.

இதையும் படியுங்க: கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!

இந்த படத்தில் அந்த பெண்ணை ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்த பெண்மணியாக காட்டியுள்ளதால்,இப்படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதனால் வழக்கறிஞர் சுந்தரேசன் என்பவர் வெற்றிமாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில் பிராமண சமூகத்தின் நற்பெயரை கெடுக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது,பிரபல இயக்குனராக இருந்து கொண்டு பிராமநர்களின் பாஷயை தவறாக பயன்படுத்தியுள்ளார்,இது அந்த சமூகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19 ஐ மீறுவதாகும்,இது ஒரு கிரிமினல் குற்றம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்,ஆகவே தமிழ்நாடு பிராமண சங்கம் படத்தில் பயன்படுத்தப்படும் பிராமண மொழியை கண்டிக்கிறது,மேலும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை உங்கள் மீதும்,உங்களுடைய படத்தின் மீதும் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!
  • Leave a Reply