விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் இவரா?.. அப்போ கன்பார்ம் ஹிட்டு தான்..!

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.

இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதியான நேற்று வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். 1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயம்.

இந்நிலையில், சினிமாவில் முன்னணி நடிகராக டாப்பில் இருக்கும் இவர் இப்போது கமிட் செய்துள்ள படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், அவர் நடிக்கப் போவதில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி பெயர் அறிவித்ததில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. நிறைய பாராட்டுக்கள் பல எதிர்மறை விமர்சனங்கள் என வருகின்றன.

இந்நிலையில், அதன்படி விஜயின் கைவசம் தற்போது, இரண்டு திரைப்படங்கள் உள்ளது. ஒன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் மற்றொரு திரைப்படம் தான் தளபதி 69 இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் தான் தளபதி 69 படத்தை தயாரிக்க போவதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

மேலும், வினோத் இயக்கப் போகிறார் என்றும், அதேபோல் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி போன்றவர்களின் பெயரும் இந்த லிஸ்டில் அடிபட்டு வந்தது. இந்நிலையில், தற்போது தெலுங்கு மீடியாக்களில் வெளியாகியிருக்கும் தகவலின் படி தளபதி 69 படத்திற்கு வெற்றிமாறனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது உறுதியானால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்கும் எனவும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், இது நிச்சயமாக அரசியல் படமாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தளபதி 69 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தளபதி 69 படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்க போகிறார் என்றும், தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

Poorni

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

13 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

14 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

16 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

17 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

17 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

18 hours ago

This website uses cookies.