ராஜராஜ சோழனை “இந்து” அரசனா மாத்திட்டாங்க..! அப்போ.. எதுக்கு சிவன் கோவிலை கட்டினார்..? வெற்றிமாறனுக்கு நெட்டிசன்கள் சரமாரி கேள்வி..!

Author: Vignesh
3 October 2022, 1:30 pm

ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்டி அதன்மூலம் நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருவதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பேசு பொருள் ஆகி உள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

சோழர்களைப் பற்றிய படம் தான் பொன்னியின் செல்வன். அப்படம் வெளியாகி சர்ச்சைகளில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் பெரியளவில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் வெற்றிநடைபோட்டு வருகிறது. ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பேசுபொருள் ஆகி உள்ளது.

அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்டி அதன்மூலம் நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார் வெற்றிமாறன். அவரின் இந்த பேச்சு தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைப்பார்த்த நெட்டிசன்கள், ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் ஏன் சிவன் கோவிலை கட்டினார் என கேள்வி எழுப்பி வந்தனர்.

இதுதவிர ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்று வெற்றிமாறனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அவரை சாடி இருந்தார் பாஜகவின் எச்.ராஜா. இது ஒருபுறம் இருந்தாலும், வெற்றிமாறன் சொன்னது சரிதான் என்று அவருக்கு ஆதரவுக்குரலும் ஒருபுறம் ஒலித்த வண்ணம் உள்ளது.

ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என வெற்றிமாறன் சொன்னது உண்மை தான் என குரல் கொடுக்கும் சிலர், அதற்காக சொல்லும் காரணம் என்னவென்றால், ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அந்த காலகட்டத்தில் சைவம், வைணவம், புத்த மதங்கள் தான் இருந்தன. இந்து மதம் என்பது நாளடைவில் வெள்ளைக்காரர்களின் ஆட்சி காலத்தில் வந்த ஒன்றாகும்.

அதனால் தான் ராஜ ராஜ சோழன், இந்து இல்லை என வெற்றிமாறன் சொன்னதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ராஜ ராஜ சோழன், சைவத்தை தழுவி வந்தவர் என்பதால் தான் அவர் சிவன் கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது. நெட்டிசன்கள் இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்களை கூறினாலும், வெற்றிமாறன் எதற்காக அப்படி சொன்னார் என்பது அவரே விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 447

    0

    0