தனுஷ் பட சூப்பர் ஹிட் பாட்டு.. ஆனா எனக்கு கேட்க காண்டாகும்.. உண்மையை சொன்ன வெற்றிமாறன்

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே பிளாக்பஸ்டர் ஹிட் கன்பார்ம். வெற்றிமாறனின் முதல் படமே தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் தான். அந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆடுகளம் படத்தில் ஒன்றிணைந்தனர். சேவல் சண்டையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

தனுஷ் கெரியரில் இந்த அளவிற்கு நல்ல இடத்தை பெறுவதற்கு வெற்றிமாறனும் ஒரு காரணம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. பின்னர், வடசென்னை, அசுரன் போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தனுஷை பிரம்மிக்க வைக்கும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில், வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில், அவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான ஆடுகளம் திரைப்படம் குறித்து அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தில் அனைத்து பாடல்களும் செம ஹிட். குறிப்பாக சினேகன் வரிகளில் அமைந்த ‘வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா’ என்ற பாடல் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் குறித்து வெற்றிமாறன் குறிப்பிடுகையில் முதலில் இந்த பாடலை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. படமாக்கப்பட்ட பிறகு தான் அந்த பாடலின் பின்னனியில் இருக்கும் கருத்தை புரிந்து கொண்டேன். அதன் பிறகே இந்த பாடல் ஏன் வைத்தோம் என்று மிகவும் வேதனைப்பட்டேன் என்று கூறினார்.

ஏனெனில் அந்த பாடல் உணர்த்தும் கருத்து என்னவென்றால் வெள்ளையாக இருக்கும் பெண்களை மட்டும் தான் ரசிப்பீர்களா? என்ற நிலைமைக்கு அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது எவ்ளோ பெரிய தவறு? அப்பவே சொல்லியிருந்தால் சினேகன் வேறு பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்திருப்பார். ஆனால் அந்த சமயத்தில் எல்லாரும் அந்த பாடலை கொண்டாடினார்கள் என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டேன் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 599

    2

    0