யானை மட்டும் இருந்தா போதாது.. செண்டிமெண்ட் பேசிய பேரரசு.. குட்டுவைத்த வெற்றிமாறன்..!(வீடியோ)
Author: Vignesh27 March 2024, 11:21 am
விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகப் பெரும் கமர்சியல் கிங் இயக்குனராக வளம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பேரரசு. இவர், இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது. ஆனால், அதை தொடர்ந்து பெரிய வெற்றி இல்லாமல் பேரரசு தற்போது, படமே இல்லாமல் இருக்க சமீபத்தில் இவர் கள்வன் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், இந்த படத்தில் யானை உள்ளது. யானை என்றாலே பிள்ளையார் தான், கண்டிப்பாக இந்த படம் ஹிட் தான் என்று கூறினார். இதை தொடர்ந்து பேச ஆரம்பித்த வெற்றிமாறன் யானை இருந்தாலும், குதிரை இருந்தாலும் நல்ல திரைக்கதை இருந்தால் தான் படம் ஓடும் என சொல்ல அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெற்றிமாறன் ?? pic.twitter.com/R2f8ZOu3bd
— RamKumarr (@ramk8060) March 26, 2024