முன்பெல்லாம் நான் இப்படி இல்லை; வாடி வாசல்- கவலையுடன் சொன்ன வெற்றி மாறன்
Author: Sudha2 July 2024, 1:46 pm
வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை படம் சூரி, விஜய் சேதுபதி போன்றோர் நடிப்பில் வெளியானது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கும் முடிவடைந்து படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 2 திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் வெற்றிமாறனையும், படக்குழுவினரையும் பாராட்டினர்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம் வாடிவாசல். எப்போதும் தனுஷுடன் இணையும் வெற்றி மாறன் முதன் முறையாக சூர்யாவுடன் இணையும் திரைப்படம் வாடிவாசல்.
விசாரணை அசுரன் போன்ற திரைப்படங்கள் நாவல்களை தழுவி எடுக்கப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றது.
நாவல்களை படமாக்குவதில் வெற்றிமாறன் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் அமீரும் நல்ல ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த வருடம் ஏறு தழுவும் வீரர்களிடம் சூர்யா பயிற்சி பெறும் வீடியோவை படக்குழு வெளியிட்டது.அது பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது வாடிவாசல் குறித்து ஒரு சிறு தகவலை பகிர்ந்துள்ளார் வெற்றி மாறன்.வாடிவாசால் திரைப்படத்தில் ஒரு காட்சியை படமாக்க வேண்டி உள்ளது அக்காட்சியை படமாக்க 50 முதல் 60 நாட்கள் தேவைப்படும். ஆனால் அது படமாக்குவோமோ என்பது தெரியாது.
முன்பெல்லாம் இப்படி இல்லை.எப்படியாவது ஒரு காட்சியை படமாக்கி விடுவேன்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.அது மிகவும் வருத்தம் என தெரிவித்துள்ளார்