செம Vibe…. “ஹண்டர் வண்டார்” தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் பட பாடல்!

Author:
20 September 2024, 5:04 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படம் புகழ் இயக்குனரான தா.செ ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் புகழ் பெற்ற இயக்குனர் இயக்குவதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.

vettaiyan - Update News 360

அதே நேரம் படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் நடக்கும் கதை என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் , ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

vettaiyan - Rajinikanth - Update News 360

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதை எடுத்து தற்போது வேட்டையன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான ஹண்டர் வாட்டர் என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்: கையை அறுத்துக்கொள்வேன்… ஆர்த்தி மீது இருந்த தீரா காதல் – மிரட்டிய ஜெயம் ரவி!

சித்தார்த் பஸ்ரூரால் குரலில், அறிவு எழுதிய பாடல் வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடல் ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் சக்தியைக் கொண்டாடுகிறது. செம வைபாக இருக்கும் இந்த பாடல் நிச்சயம் சூப்பர்ஸ்டாரின் புகழ் பாடும் ஒரு டைனமிக் டிராக் ஆகும். இதோ அந்த பாடல்: https://www.youtube.com/watch?v=XYTrUjPuA6I

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 348

    0

    0