ஜெய் பீம் படத்தின் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
பிரம்மாண்ட நிறுவனம் லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் முதல் அறிவிப்பில் இருந்து ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து விட்டது. இந்த நிலையில் படத்தின் முதலாவது பாடலான மனசிலாயோ பாடல் தற்ப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் தற்ப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது . இதோ அந்த வீடியோ: