சும்மா அதிருதில்ல… ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் “வேட்டையன்” – இத்தனை கோடியா?

Author:
25 September 2024, 3:04 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படம் புகழ் இயக்குனரான தா.செ ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் புகழ் பெற்ற இயக்குனர் இயக்குவதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.

vettaiyan

அதே நேரம் படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் நடக்கும் கதை என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் , ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:நான் இப்படி இருக்க காரணம் சூர்யா தான் – நன்றி மறவாத இயக்குனர் ஞானவேல்!

vettaiyan

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் முன் பதிவு வசூலை வாரி குவித்து வருகிறது. அதன்படி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தின் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1.25 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 367

    0

    0