தமன்னா பண்ணா தப்பு இல்ல.. நான் பண்ணா குத்தமா? கடுகடுத்த விசித்ரா..!
Author: Vignesh3 October 2023, 5:18 pm
1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இப்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இதனிடையே, முன்பு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசிய விசித்ரா என்ன செய்கிறேன் என்று தெரியாமல் தனது முதல் படத்திலேயே கிளாமராக நடித்ததாகவும், தான் அந்த சமத்தில் இயக்குனர் சொன்னதை செய்து கொண்டிருந்ததாகவும், கதாபாத்திரம் பற்றி எதுவும் அந்த சமயத்தில் தெரியாது எனவும், என்னைவிட 15 வயது மூத்த கேரக்டரில் நடித்தேன்.
அப்போது, நான் முதிர்ச்சியடையாமல் இருந்தேன். முன்பே இது குறித்து தெரிந்திருந்தால் அந்த கேரக்டரில் நடித்து இருக்க மாட்டேன். அதன் மூலம் தனக்கு வழக்கமான கிளாமர் வேடங்களே கிடைத்தது. கிளாமருக்கு ஏற்றார் போல் தன்னுடைய அமைப்பு, உயரம், எடை மற்றும் உருவமாக இருந்தது.அதை திரையுலகம் பயன்படுத்திக் கொண்டது
ஆனால், என் கவர்ச்சியான கேரக்டரில் நடிக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். தமன்னா செய்வது நடனம் வெப் சீரிஸ் என சொல்கிறீர்கள். அவர் செய்வது கிளாமராக இல்லையா பிறகு ஏன் என்னை மட்டும் கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடிக்கிறார்கள். பிறகு ஏன் என்னை மட்டும் முத்திரை குத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அது தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பு என்றும், தான் அதில் நடித்ததாகவும் அதனால் தனக்கு கதாபாத்திரங்கள் கிடைத்தது. இன்றைய தலைமுறை அப்படி இல்லை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு தைரியம் வேண்டும் நடிகைகளும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட தைரியம் வேண்டும் என்று விசித்ரா தெரிவித்துள்ளார்.