விசித்ராவை படுக்கைக்கு அழைத்த விஷயத்தில் கமல் கூட… கணவர் எமோஷனல் பேட்டி..!
Author: Vignesh23 November 2023, 3:15 pm
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார்கள். இதில், நடிகை விசித்ரா தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மனம் உறுகி பேசினார். இதில், படப்பிடிப்பின் போது படத்தின் ஹீரோ என்னை அவருடைய ரூமுக்கு வரச் சொல்லி தவறான முறையில் அழைத்தார்.
நான் போகவில்லை, அதன் பின்னர் என்னை பலரும் டார்கெட் செய்து தவறான முறையில் நடக்க முயற்சி செய்தனர். என்னை ஒருவர் தவறான முறையில் தடவினார். தெரியாமல் செய்திருப்பார் என முதல் முறை நான் விட்டுவிட்டேன். அதன் பின்னர் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தார். நான் என்னை தொட வந்த கையை இறுதியில் பிடித்து விட்டேன். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று எனக்கு நடந்ததை புகார் கொடுத்ததும், யாரும் எனக்கு உதவவில்லை சங்கத்தலைவரும் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கண்கலங்கி பேசினார்.
இதனிடையே, நடிகை விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்து, இப்படியொரு கொடுமை நடக்க காரணமாக இருந்த அந்த நடிகர் பாலகிருஷ்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கதையில் விசித்ரா கூறிய விஷயங்களும், பாலகிருஷ்ணாவின் இப்படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
#Vichithra shares her personal bitter experience while shooting 20 years ago! I think vichitra specified that worst incident in this fight scene.
— Vignesh (@Vignesh4cbe) November 21, 2023
Hero: balakrishna
movie :Bhalevadivi Basu(Telugu) and Stunt master who slapped her was a.vijay #BiggBoss7Tamil #BiggBossTamil7 pic.twitter.com/PkCcICvvbY
விசித்ரா இந்த சம்பவத்தை கூறும்போது தன்னை தவறாக அழைத்து டாப் நடிகர் என்று விசித்ரா குறிப்பிட்டு இருந்தார். இதனால் அனைத்து விஷயங்களும் பாலகிருஷ்ணாவுடன் ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Story Behind #Vichithra Today At The Task !! #BiggBossTamil #BiggbossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/9SavZBimjH
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) November 21, 2023
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய விசித்ராவின் கணவர் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் தானும், விசித்ராவும் நண்பர்கள் கூட இல்லை. சக மனிதனாக மட்டுமே அவருக்கு உதவினேன். இந்த விஷயத்தில், நீ ஏன் தலையிடற இது எங்களுடைய பிரச்சனை என்று அந்த பிரபல நடிகர் மிரட்டினார். திருமணத்திற்கு பின்பு இது தொடர்பான வழக்குகள் நடந்தது. ஆனால், நடிகர் சங்கம் வழக்கை வாபஸ் வாங்க வைக்க மட்டுமே போராடினார்கள். யாருமே எங்களுக்கு துணையாக நிற்கவில்லை. கமல்ஹாசன் கூட இந்த டாபிக்கை பிக் பாஸில் பேச மாட்டார் என்று விசித்ராவின் கணவர் ஷாஜி பேசியுள்ளார்.