போதை ஏறிப் போச்சு… புத்தி மாறிப் போச்சு.. கத்ரீனா கைஃப்க்கு தாலி கட்டிய நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Author: Vignesh16 May 2023, 11:30 am
இந்தி திரையுலகில் பும் என்ற படத்தில்அறிமுகமானவர் தான் கத்ரீனா. பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.
இதற்கு அடுத்த படத்திலேயே சல்மான் கான், சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார்.
இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.
அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்கள் சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது, கவர்ச்சி உடையில், பதிவிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னணி நடிகையாக பாலிவுட் சினிமாவில் திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரானா காலக்கட்டத்தில் நடிகர் விக்கி கெளசல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த விசயம் தான்.
இதனிடையே, திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் விக்கி விஷால் நடிப்பில் Zara Hatke Zara Bachke என்ற படத்தில் சாரா அலி கானுடன் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
அந்த பேட்டியில், தன்னுடைய திருமணத்தின் முந்தின நாளில் குடித்ததால் தலைக்கேரிய போதையில் இருந்ததாகவும், அதனால் திருமணத்திற்கு ஒருநாள் முன் தனியாகவும் திருமணத்திற்கு ஒரு நாள் கழித்து திருமணமாகியும் இருந்ததாக, மேலும் கத்ரினா கைஃப்-ஐ திருமணம் செய்ததற்கு பின் தன் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்ததாகவும் விக்கி கெளசல் தெரிவித்துள்ளார்.