முதன்முறையாக 52 வயது நடிகருக்கு ஜோடியாக ப்ரிய பவானி ஷங்கர்.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!
Author: Vignesh18 October 2023, 12:15 pm
அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா? என்பதே பலருக்கும் சந்தேகம் வந்தது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பாகவே பட குழுவினர் அங்கு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக நடிகை திரிஷா மற்றும் ரெஜினா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை திரிஷா அசர்பைஜானில் இருப்பதை instagram மூலம் பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் வில்லனாக நடிகர் ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே, விடாமுயற்சியில் நடிக்க நடிகர் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயது அஜித்குமார் மற்றும் 40 வயதுமிக்க அஜித்குமார் என்று இரு வேடங்களில் நடிக்க உள்ளாராம்.
அதில், இளம் வயது அஜித்திற்கு நடிகை திரிஷா ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு அஜித்துக்கு ஜோடியாக ப்ரிய பவானி ஷங்கர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடைசியாக அசல் படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதனால், 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இரு வேடங்களில் அஜித் குமார் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சியில் இரு வேடங்களில் நடிப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.