அஜித் போல காஸ்ட்லீ பைக் வாங்கிய பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh21 March 2024, 7:04 pm
அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் படங்களின் நடிப்பது மட்டுமின்றி சமீப காலமாக பைக் ரைடு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அவர் இமயமலை வரை தனது குழுவினர் உடன் பைக் ரைடு சென்று வந்தார். மேலும், அவர் இதற்காக ஒரு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
அஜித் துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியருக்கும் பைக் ரைடு ஆர்வம் தொற்றிக்கொண்டு அவரும் அஜித் உடன் லடாக் வரை ட்ரிப் சென்றார். மேலும், அதன் பின்னர் மஞ்சுவாரியர் புது பைக் ஒன்றை வாங்கி அதில், தற்போது பைக் ரைடு சென்று வருகிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்த பிக் பாஸ் புகழ் ஆரவ் தற்போது 22.5 லட்சம் கொடுத்து ஒரு விலையுயர்ந்த பைக்கை வாங்கி இருக்கிறார். Triumph Tiger 1200 என்ற அந்த பைக் 1160 சிசி திறன் கொண்டது. கனவு நிஜமாகிவிட்டது என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.