அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு முதல் 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். பின்னர் அவர் திரும்பி வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பித்தது.
பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். பின்னர் மீண்டும் அஜர்பைஜானில் நாட்டில் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இதனிடையே அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தல ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும்.
இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 2ம் வாரத்தில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்காக படக்குழு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் ஆலுமா டோலுமா போல ஒரு குத்து பாடல் இருக்கிறது என கூறுகின்றனர். அத்துடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்து ஏப்ரலில் படம் ரிலீஸ் ஆகும் என செய்திகள் கூறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.