இணையத்தில் லீக் ஆன “விடாமுயற்சி” ஆக்ஷன் காட்சி – ஆர்வக்கோளாறுகளால் அப்செட் ஆன படக்குழு..!

Author: Vignesh
15 February 2024, 4:54 pm

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

vidamuyarchi

பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். பின்னர் மீண்டும் அஜர்பைஜானில் நாட்டில் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vidaamuyarchi

இதில் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இதனிடையே, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தல ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும்.

vidaamuyarchi

இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். அந்த செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் லீக் செய்யப்பட்ட நிலையில் வைரலாகி வருகிறது.

vidaamuyarchi
  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 294

    0

    0