விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
Author: Selvan9 January 2025, 6:53 pm
விரைவில் குட் நியூஸ் சொல்ல போகும் விடாமுயற்சி
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில்,திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்தது.
இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி விலகியதையடுத்து,அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்கள் தங்களுடைய ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.
இதையும் படியுங்க: வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் இன்னொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து ரசிகர்களை சந்தோசப்படுத்தியது.ரசிகர்களும் நமக்கு பொங்கல் ஏப்ரல் மாதம் தான் என கமெண்ட் செய்து வந்த நிலையில் தற்போது அஜித்தின் விடாமுயற்ச்சி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#VidaaMuyarchi Censor ✅
— Rahman (@iamrahman_offl) January 9, 2025
Certificate – U/A
Run Time – 2⃣ hrs 3⃣0⃣mins 4⃣6⃣secs pic.twitter.com/6rjcelkNB8
மேலும் விடாமுயற்சி படம் 2.30 மணிநேரம் இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.இதனால் விரைவில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.