‘விடாமுயற்சி’ படம் நின்றுபோச்சா? நயன்தாரா சாபம் சும்மா விடுமா? ஷாக்கிங் தகவல் இதோ!

Author: Shree
29 May 2023, 10:51 am

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம். மேலும் இதன் டைட்டிலில் சில சீக்ரெட்ஸ் ஒளிந்திருக்கிறதை பார்க்க முடிகிறது.

அதாவது, விடாமுயற்சி என்ற டைட்டிலில் “ற்” என்ற வார்த்தையில் வைக்கப்பட்ட புள்ளி தேடல் பொருளை உணர்த்துவதாக இருக்கின்றது. எனவே இப்படத்தில் அஜித்தின் வேர்ல்ட் டூர் பயணத்தின் ஸ்வாரஸ்யங்களையும், சாகசங்களையும் டாகுமெண்ட்ரியாக எடுக்கலாம் என எதிர்பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லாமல் போஸ்டரில் சுழல் இடம் பெற்று இருப்பதால் ஒரு கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இப்படம் தாமதம் ஆனதால் அஜித் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் பரவி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவனை விலக்கியதால் நயன்தாரா விட்ட சாபம் தான் அஜித் படம் பாதியிலே நின்றுபோச்சு என சிலர் விமர்சித்தனர். ஆனால், தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி படம் நின்றுபோகவில்லையாம். படத்தின் வேலைகள் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால். இப்படி வதந்திகள் பரவிவிட்டது. எனவே உண்மைத்தன்மையற்ற தகவல்களை ரசிகர்கள் யாரும் நம்பவேண்டாம் என செய்திகள் கூறுகிறது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?