போட்டி போட்டு AK படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

Author: Vignesh
25 June 2024, 9:24 am
ajith-updatenews360
Quick Share

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்தவரும் விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், படம் கைவிடப்பட்டதாக பேச்சும் சமீபத்தில் கிளம்பியது. ஆனால், விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை. இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜார்பைஜானில் துவங்கி இருக்கிறது. அதில் கலந்து கொள்ள படக்குழுவினர் சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ajith-updatenews360

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் நடித்தத்துள்ளனர். இந்த திரைப்படம், இறுதி கட்டப்படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் கூட வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு பட குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ajith-updatenews360

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் OTT- உரிமையை netflix நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை 75 கோடி கொடுத்து netflix வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Views: - 55

0

0

Leave a Reply