விடாமுயற்சி TITLE CARD பாத்தீங்களா? அஜித்துக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்..!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2025, 11:33 am
நீண்ட இடைவெளிக்கு பிறகு, அஜித்தின் விடாமுயற்சி படம் ரசிகர்கள் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் விடாமுயற்சி வெளியான திரையரங்குகளில் மேள, தாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விடாமுயற்சி படக்குழு சர்ப்ரைஸ் வைத்துள்ளது. அதவாது பத்ம பூஷன் விருது அஜித்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் டைட்டில் கார்டில் பத்மபூஷன் அஜித்குமார் என வெளியானது.
மேலும் பத்மபூணன் விருது பெற்ற திரு. அஜித்குமார் அவர்களை விடாமுயற்சி படக்குழுவினர் வணக்கத்துடன் வாழ்த்தி பெருமை கொள்கிறோம் என படக்குழு படத்துவக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.