தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!
Author: Selvan2 February 2025, 1:53 pm
விடாமுயற்சி திருவிழா ஆரம்பம்
கடந்த இரண்டு வருடங்களாக அஜித் திரைப்படம் திரைக்கு வராமல் இருந்த நிலையில்,ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதையும் படியுங்க: ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!
படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போ வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் நேற்று இரவு சர்ப்ரைஸ் ஆக டிக்கெட் முன்பதிவை வெளியிட்டனர்.முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் முதல் நாளுக்கான பல திரையரங்கில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆனது.
மேலும் அடுத்தடுத்த நாட்களுக்கான காட்சிகளும் மின்னல் வேகத்தில் புக் ஆகி வருகிறது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.சமீப காலமாக அஜித் கார் ரேஸில் கலக்கி ரசிகர்களின் பாராட்டை பெற்று வரும் நிலையில்,விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய அரசு நடிகர் அஜித்குமாருக்கு சினிமாத்துறைக்காக பதம் பூஷன் விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.