10 நாள் கூட ஆகல… பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் விடாமுயற்சி..!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 8:38 am
விடாமுயற்சி படம் அஜித்தின் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த திரைப்படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படத்தில் மாஸ் இல்லை, அதிக லேக் உள்ளது என்ற விமர்சனத்தை தாண்டி நல்ல வசூல் செய்து வருகிறது.
இதையும் படியுங்க: உனக்கு தேவையில்லாத வேலை.. ஒதுங்கிப் போ : நடிகை ராதிகாவை விளாசிய பிரபலம்!
அஜித்தின் கேரியரில் மிகவும் மெதுவாக செல்லும் படம் என சொல்லப்பட்டாலும், நடிகர்கள், இசை என அனைத்தையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
![Vidaamuyarchi in Sun Tv](https://www.updatenews360.com/wp-content/uploads/cwv-webp-images/2025/02/Vidaamuyarchi-in-Sun-Tv.jpg.webp)
படம் வெளியாகி 5 நாளை கடந்த நிலையில், தற்போது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாக உள்ளது. அதவாது விடாமுயற்சி படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சேனலான சன் டிவி கைப்பற்றியுள்ளது.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி படத்தை ஒளிபரப்ப சன் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.