விடாமுயற்சி 5-ஆம் நாள் வசூல்
அஜித்,திரிஷா,அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் 5-ம் நாளான நேற்று வசூலில் சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படியுங்க: துப்பாக்கியை கொடுத்த விஜய்க்கு துரோகம்? சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு!
மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்று,கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் படத்தின் வசூல் மந்தமாகி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.இப்படத்தில் அஜித்திற்கு எந்த ஒரு மாஸ் காட்சிகளும் இல்லாததால்,ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்,இருந்தாலும் பேமிலி ஆடியன்ஸ்களை படம் கவர்ந்ததால்,முதல் மூன்று நாள் படத்தின் வசூல் கல்லா கட்டியது.
அதன்படி முதல் நாள் தமிழ் நாட்டில் 26 கோடியும்,இரண்டாம் நாள் 11 கோடியும்,மூன்றாம் நாள் 13.5 கோடியும்,நான்காம் நாள் 12.5 கோடியும் வசூலித்தது,நேற்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் படத்தின் வசூல் மளமளவென சரிந்து வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளததாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.
இதுவரை உலகளவில் இப்படம் 112 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் வரக்கூடிய நாட்களில் படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.