கடையை இழுத்து மூடுற நேரம் வந்தாச்சு…விடாமுயற்சிக்கு வந்த பெரும் சிக்கல்.!

Author: Selvan
21 February 2025, 6:23 pm

முயற்சியை கைவிட்டதா விடாமுயற்சி

அஜித் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி,இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிருந்தார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்ததோடு வசூலிலும் மந்தம் காட்டியது.இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவும் மிகவும் அப்சட் ஆனார்கள்.

Ajith Kumar VidaMuyarchi review

இந்த நிலையில் தற்போது நிறைய புது படங்களின் வருகையால் பெரும்பாலான தியேட்டரில் விடாமுயற்சி திரையிடப்படவில்லை,அதுமட்டுமில்லாமல் இன்று வெளிவந்த டிராகன் திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருவதால் விடாமுயற்சி காத்து வாங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை…உண்மை தெரிந்தவுடன் கண்ணீர் விட்டு கதறல்.!

கிட்டத்தட்ட படம் ரிலீஸ் ஆகி 15 நாட்கள் கடந்த நிலையில்,இது வரைக்கும் விடாமுயற்சி திரைப்படம் 149 கோடி வசூலை அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.

புது படங்களின் வருகையால் இனி வரக்கூடிய நாட்களில் விடாமுயற்சி வசூல் பெரிதாக இருக்காது எனவும் கூடிய விரைவில் தியேட்டரில் இருந்து OTT-க்கு தாவும் என கூறப்படுகிறது.

  • new title for kamal haasan in thug life movie அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?