வசூலில் அசால்ட் காட்டும் ‘விடாமுயற்சி’ …முதல் நாள் கலெக்சன் எத்தனை கோடினு தெரியுமா..!
Author: Selvan7 February 2025, 9:56 pm
வசூல் வேட்டையை தொடருமா விடாமுயற்சி
நீண்ட நாட்களுக்கு பிறகு,மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே,முன்பதிவில் தன்னுடைய வசூல் வேட்டையை ஆரம்பித்து விட்டது,தற்போது உலகளவில் படத்தின் முதல் நாள் வசூலின் தகவல் வெளிவந்துள்ளது.
படம் பார்த்த பலரும் கலவையான விமர்சனத்தை கொடுத்து வந்தாலும்,அஜித்துக்காக படம் வசூலை அள்ளும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.படத்தின் கதையை பற்றியும்,வசூல் குறித்தும் பலரும் பல வித தகவல்களை கூறி வந்த நிலையில்,நேற்று வெளியான விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 60.32 கோடி வசூலை குவித்து மிரட்டியுள்ளது.இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) February 7, 2025
தமிழ் நாட்டில் விடாமுயற்சி திரைப்படத்தின் வசூலை pinkvilla வெளியிட்டுள்ளது,அதில் முதல் நாள் மட்டும் 25.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.தொடர் சரிவை சந்தித்து வந்த லைக்கா நிறுவனத்திற்கு விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல் பெரும் மகிழ்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்க: இயக்குனர் போட்ட கண்டிஷனை மறுத்த பிரபல நடிகை…வாய்ப்பை தட்டி சென்ற ஜோதிகா..!
மேலும் விடாமுயற்சி திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதால்,வரக்கூடிய நாட்களின் வசூலை பொறுத்து படத்தின் வெற்றி கணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.