அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!

Author: Selvan
25 December 2024, 8:44 pm

விடாமுயற்சி பாடல் வெளியீடு

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

Ajith Kumar Vidamuyarchi updates

இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் அஜித்தின் மாஸான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த சூழலில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸை அறிவித்துள்ளது விடாமுயற்சி படக்குழு,இன்று காலையில் இருந்து அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றாக பி வி சிந்து திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது.

இதையும் படியுங்க: இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!

தற்போது வரும் 27 ஆம் தேதி அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் லிரிக் விடீயோவை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படத்தின் ட்ரைலர் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகலாம் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது.இதனால் அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து பலமாக காத்திருக்கிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 16

    0

    0

    Leave a Reply