‘விடாமுயற்சி’ படம் இல்லை..கார் ரேஸ் தளம்..படக்குழுவை தாக்கிய பிரபலம்..ரசிகர்கள் ஆவேசம்.!
Author: Selvan8 February 2025, 6:17 pm
விடாமுயற்சி ஒரு கார் ரேஸ் தளம்
அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தை பற்றி பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும்,அஜித்தை திரையில் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதி,வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் பிரபல வலைப்பேச்சு பேச்சாளர் பிஸ்மி விடாமுயற்சி திரைப்படத்தை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது,அந்தணன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் பேட்டியை குறிப்பிட்டு பேசுவார்,அதாவது விடாமுயற்சி படம் ஏன் பண்ணோம் என அஜித் ஒரு காரணத்தை கூறுகிறார் என அந்தணன் சொல்லும் போது,நடுவில் பிஸ்மி நான் கார் ஓட்ட பழகிக்கணும்,அதாவது அஜித் கார் ஓட்டி பழக விடாமுயற்சி படத்தை எடுத்துள்ளார்கள் என மறைமுகமாக தாக்கி பேசியிருப்பார்.
இதையும் படியுங்க: விஜய் மீது இப்படி ஒரு ஆசையா…ஃபீலிங்கில் நடிகை சாய் பல்லவி..!
மேலும் அவர் கார் ரேஸ் மற்றும் கார் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் அவரே நடிக்கிறார்,அவருடைய கார் ஓட்டும் திறமையை நாம் பில்லா,ஆரம்பம்,மங்காத்தா என பல படங்களில் பார்த்துவிட்டோம்,அப்படி இருக்கையில் அவர் விடாமுயற்சி படத்திலும் ரேஸுக்காக கார் ஓட்டி பழக தான் நடித்துள்ளார் என பேசியிருப்பது அஜித் ரசிகர்களை கோவத்தில் ஆழ்த்தியுள்ளது.பலரும் அவரது கருத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.