ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!
Author: Selvan3 February 2025, 9:57 pm
புது சாதனை படைக்க இருக்கும் அஜித்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 படமாக உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
பல வித சூழ்நிலைகளால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்ட்டே இருந்தது,தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
சமீபத்தில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்தது,ரசிகர்கள் பலர் போட்டி போட்டு டிக்கெட்களை புக் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.6 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.வெளிநாடுகளிலும் முன்பதிவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
இதையும் படியுங்க: அட இது நல்லா இருக்கே…இரண்டு பெண் குழந்தைகளுடன் ‘நயன்தாரா’… வைரலான கியூட் வீடியோ.!
இதனால் பெரும்பாலான திரையரங்கில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக உள்ளது.மேலும் இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1000 திரைகளில் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விடாமுயற்சி இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்த உள்ளது.இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் 950 திரைகளில் ரிலீஸ் ஆனதே அதிகபட்சமாக இருக்கும் நிலையில்,தற்போது அஜித் அவருடைய சாதனையே அவரே முறியடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.