“SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

Author: Selvan
31 December 2024, 9:50 pm

அஜித்தின் கடின உழைப்பை பகிர்ந்த கல்யாண் மாஸ்டர்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்,இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற படத்தின் ஷூட்டிங் வேலை எப்போ முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஒருவழியாக பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Ajith’s hard work Vidamuyarchi

சமீபத்தில் படத்தின் டீஸர் திடீரென வெளியாகி சமூக வலைத்தளத்தை திணறடித்தது.இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான சவதிகா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டான்ஸ் மாஸ்டரான கல்யாண்,அஜித் பற்றிய ஒரு தகவலை கூறியுள்ளார்.அதாவது சவதிகா பாடலின் ஷூட்டிங் போது அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது,அவரை நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டாம் எனவும்,ரெஸ்ட் எடுங்க என சொன்னோம்,அதற்கு அஜித் டான்சர்கள் இருக்காங்க,நான் வரவில்லை என்றால் பல பேர் பாதிப்பு அடைவாங்க என கூறி மாத்திரையை போட்டுகொண்டு ஷூட்டிங் இடத்திற்கு வந்தார்.

இதையும் படியுங்க: புஷ்பாவை விட இரண்டு மடங்கு மாஸ்..அல்லு அர்ஜுனின் அடுத்த பட அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்..!

அவர் நினைத்திருந்தால் ரெஸ்ட் எடுத்து உடல்நிலை சரியான பிறகு வந்திருக்கலாம், ஆனால் அவர் அப்படி பண்ணவில்லை,அவரது செயலை பார்த்து நாங்கள் அனைவரும் வியப்பில் இருந்தோம் என கல்யாண் மாஸ்டர் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

  • Tamannaah Vijay Varma relationship காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
  • Views: - 70

    0

    0

    Leave a Reply